டெல்டா மாவட்டங்களில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிப்பெருக்கு கலைகட்டிவருகிறது. பெண்களும் சிறுவர்களும் ஆர்வமாகவே கொண்டாடுகின்றனர்.
விவசாயிகளை வாழவைக்கும் தெய்வமாக விளங்கும் காவிரிக்கு நன்றி கூறும் வகையில் தமிழகத்தில் கொண்டாடப்படும் பெருவிழா ஆடிப்பெருக்கு விழா. இவ்விழாவில் நதிகள்,மற்றும் அதன் கிளை ஆறுகள் செல்லும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆடி மாதம் 18 ம் தேதி ஆற்றுக்கு சென்று பழங்கள், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பொருட்களை வைத்து வணங்குவதும் புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் திருமணமாலையை தண்ணீரில் விட்டுவிட்டு வணங்கி செல்வது வழக்கம்.
கடந்த ஆறு ஆண்டுகளாக இயற்கையும் பொய்த்து, மேட்டுரிலும் தண்ணீர் இல்லாமல் காவிரியும் அதன் துனைநதிகளும் வரண்டுகிடந்தது, அந்த தண்ணீரை நம்பியிருந்த விவசாயிகளின் வாழ்வும் வசந்தமின்றி வரண்டது. இந்த ஆண்டு தண்ணீர் காவிரியில் பெருக்கெடுத்து வருகிறது, நீர்நிலைகள் எப்படியும் நிரம்பிவிடும் விவசாயம் நிச்சயம் தழைக்கும் என்கிற நம்பிக்கையோடு தண்ணீருக்கான விழாவை கொண்டாடுகின்றனர்.
ஆடி 18 விழா என்றாலே சப்பரமும் காதாலகருமனியும், பேரிக்காயும் முக்கிய பங்குவகிக்கும். டெல்டா மாவட்டங்களில், சிறுவர்கள் சப்பரம் என்கிற சிறிய அளவிலான தேரை இழுத்து தங்களது குடும்பத்துடன் ஆற்றங்கறைக்குச் சென்று மகிழ்வார்கள். அந்த நிகழ்வு ஆடி 18-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நலிவடைந்தது, அதற்கு ஆறுகளில் தண்ணீர் இல்லாமல் போனதே காரனம்.
இந்த ஆண்டு தொழில் எப்படி தயாரிக்கும் கும்பகோணம் கண்ணகியிடம் விசாரித்தோம் "முன்பெல்லாம் ஆடிப்பெருக்கையொட்டி, பெண்கள் ஆற்றங்கரைகளுக்கு பூஜைப் பொருள்கள் கொண்டு சென்று காவிரியை வழிபடுவர். அவர்களுடன் அந்த தெருக் குழந்தைகள், சிறுவர்கள் அனைவரும் சிறிய அளவிலான தேரை அளங்காரம் செய்து இழுத்துச் சென்று மகிழ்வர்கள் இதற்கென, ஆண்டுதோறும் 1500-க்கும் மேற்பட்ட சப்பரங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தோம். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் அவ்வளவு சிறப்பாக கொண்டாடவில்லை. சப்பரம் தயாரிப்பும் குறைந்துவிட்டது.
இந்தவருஷம் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் காவிரி நீர் ஆறு மற்றும் வாய்க்கால்களில் போகுது ஆடிப்பெருக்கு வெகு விமரிசையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டுக்கு சிறுவர்களின் மகிழ்வை திரும்பப்பெரும் வகையில் குறைந்த அளவிலான சப்பரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். முன்புபோல விற்பனை இல்லை. என்றாலும் சிறுவர்களுக்காக குறைந்த அளவிலான சப்பரங்களை செய்து விற்பனைக்கு வைத்துள்ளேன். " என்றார்