Published on 02/05/2022 | Edited on 02/05/2022

இலங்கையில் இருந்து கை குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில் பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், வாழ்வாதாரம் இழந்த தமிழர்கள், தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். அந்த வகையில், ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை கடற்கரைப் பகுதியில் இரண்டு மாத கை குழந்தை மற்றும் ஒரு சிறுமி உள்பட ஐந்து பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
இதையறிந்து, அங்கு சென்ற கியூ பிரிவு காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதுவரை 22 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.