மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கடன் பிரச்சனை காரணமாக மகள், மனைவியையும் சேர்த்து அணைத்துக்கொண்டு சிலிண்டரை வெடிக்க வைத்து தானும் பலியாகியுள்ளார் குடும்பத் தலைவர். கணவன், மனைவி, குழந்தை மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் சாக்லேட் மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வரும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி காஞ்சனா, மகள் அட்சயா (6). ராமமூர்த்திக்கு கடந்த ஆறு மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 2 மாதங்களாக வீட்டிற்கு வாடகை கொடுக்கவில்லை. இதனால் குடும்ப சூழ்நிலை வறுமையில் வாட, இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்த சிலிண்டரை திறந்து பற்ற வைத்தது வெடிக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தில் சிலிண்டர் வெடித்து மனைவி காஞ்சனா மகள் அட்சயா சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய ராமமூர்த்தியை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் போகும் வழியில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து திருநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தொல்லையால் சிலிண்டர் பற்ற வைத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.