புதுக்கோட்டைக்கு கடந்த 20 ந் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்காக வந்தார். ஆளுநர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் கருப்பு கொடி காட்ட போலீஸ் அனுமதி கேட்டனர். வாய் மொழியாக அனுமதி மறுத்தாலும் அரசு மகளிர் கல்லூரிக்கு எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று கருப்புக் கொடி காட்ட அனுமதி அளித்து தடுப்புகள் கட்டப்பட்டது. அதனால் திமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக் கொடியுடன் போலிசார் அனுமதித்திருந்த திடலில் திரண்டனர்.
இந்த நிலையில் ஆளுநர் வர அரைமணி நேரம் முன்பே கருப்பு கொடி காட்டச் சொல்லி அனைவரையும் கைது செய்து 3 மண்டபங்களில் அடைத்தனர். அங்கு தண்ணீர வதிகளும் இல்லை. மாலை விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நிலையில் இரவிலும் விடுதலை செய்யப்படவில்லை.
மாலை 4 மணிக்கு ஆளுநர் திருச்சி புறப்பட்டு சென்ற பிறகு கைதானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பும் பணி போலிசார் தொடங்கினார்கள். அதன் முதல்கட்டமாக மாவட்டம் முழுவதும் இருந்து முதல் தகவல் அறிக்கை பதிவேற்றும் கணினி ஆப்பரேட்டர்களை புதுக்கோட்டை நகரத்திற்கு வரவழைத்தனர். 800 பேர் மீது பிணை கிடைக்காத பிரிவுளில் வழக்கு பதிவு செய்யனும் என்று தகவலும் சொல்லப்பட்டது. அர்களும் தயாரானார்கள்.
இந்த தகவல் அறிந்த மண்டபங்களில் சிறைபட்டிருந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தண்ணீர் உணவின்றி பலர் மயங்கினார்கள்.
அதே நேரத்தில் திமுக மற்றும் தோழர்கள் தடையை மீறி கருப்புக் கொடி காட்டியதாக வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் வாங்கும் முயற்சியில் இறங்கினார்கள் முதலில் போராட்டம் நடந்த இடத்தில் பணியில் இருந்த ஆலங்குடி தாசில்தார் ரெத்தினாவதியிடம் கைது செய்யப்பட்டவர்கள் மீது புகார் கொடுங்கள் என்று கேட்க தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்ங்க நான் புகார் தரல என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு அதே பகுதியில் பணியில் இருந்த கந்தர்வகோட்டை தாசில்தார் தேவசேனா விடம் புகார் கேட்க அவரும் மறுத்துவிட்டார் கடைசியாக அப்பகுதி வருவாய் ஆய்வாளர் வைரவனிடம் புகார் கேட்க அவரும் புகார் கொடுக்க மறுத்துவிட்டார். இப்படி ஒவ்வொரு அதிகரியாக கேட்டு புகார் வாங்க முடிவில்லை. எப்படியும் புகார் வாங்கி சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்தில் குளித்து வந்த டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் முனைப்பு காட்டினார்கள்.
அதே நேரத்தில் கைது செய்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திருக்கோகர்ணம், ஆலங்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் மறியல் தொடங்கியது. சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று உளவுத் துறை தகவலால் நள்ளிரவு 12 மணிக்கு விடுதலை செய்தனர்.
ஆனால் திமுக மற்றும் தோழர்களை பழிவாங்க நினைத்தவர்கள் அதை செய்ய தடையாக இருந்ததாக தாசில்தார்கள், ஆர்.ஐ் போன்றவர்களை இடமாற்றம் செய்து பழியை தீர்த்துக் கொண்டனர்.
இதனால் கொதிப்படைந்துள்ள வருவாய் துறையினர் மாலை அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதனால் போராட்ட அறிவிப்பு இன்று மாலை இருக்கும் என்று கூறுகின்றனர் வருவாய்துறையினர்.
எப்படி எல்லாம் பழிவாங்க துடிக்கிறாங்கப்பா.