Skip to main content

வன்னியருக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து!

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

10.5% internal reservation canceled madurai high court bench order

 

வன்னியர் சமூகத்தினருக்கான 10.5% உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

 

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு, சட்டத்தை அமல்படுத்தியிருந்தது. 

 

இந்த சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (01/11/2021) நீதிபதிகள் துரைசுவாமி, முரளி சங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா? சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா? முறையான கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாமல் இடஒதுக்கீடு தர முடியுமா? என்று அடுக்கடுக்கான் கேள்விகளை எழுப்பினர். 

 

மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு தந்தது செல்லாது. அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை" என குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் வன்னியருக்கான் இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பளித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்