இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகர் ஹெச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் “வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தால் அதில் அதிமுக இடம் பெறுமா?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஹெச்.ராஜா ''இந்த யூகங்களுக்கு இடம் கொடுக்க இப்போ நேரம் இல்லை. ஆனால் ஒரு விஷயம் உறுதி. இப்பொழுது லேட்டஸ்ட் செய்தி ‘சி வோட்டர்ஸ்’ நடத்தி இருக்கக்கூடிய ஒப்பீனியன் போலில் கூட இப்போது இருப்பதைவிட முப்பது சதவீத சீட்டுகள் அதிகமாக வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளனர். எங்களுடைய எதிர்பார்ப்பு அதையும் தாண்டியது. அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது தலைமை பாஜக தான். தமிழகத்தை எல்லாம் பிரித்துப் பார்க்கக்கூடாது சார். ஒரே வீட்டில் அண்ணன் தம்பி ஐந்து பேர் இருந்தால் தகப்பனைத் தலைவர் என்று சொல்வதைப் போலதான் இது. இதில் வேறு கருத்து இருக்க முடியாது.
முட்டாள்தனமாகவும், கோமாளித்தனமாகவும் சீமான் பேசி வருகிறார். பிரபாகரன் ஆமைக்கறி ஊட்டி விட்டார் என்று கோமாளிபோல் பேசுகின்றவரை வைத்து நாம் என்ன சொல்ல முடியும். இதுதான் பிரிவினைவாதம். தமிழனே இல்லாத சீமானுக்கு இங்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு. அவரே வேற ஸ்டேட்டில் இருந்து வந்தவர் என்று சொல்கிறேன் நான். சீமான் உளறுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. பெங்களூரில் காங்கிரஸ் கட்சி 30 வருடமாக திருவள்ளுவர் சிலையை சாக்கு படுதாவில் சுத்தி வைத்திருந்தது. காங்கிரஸ் தமிழ் விரோதியா? பாஜக தமிழ் விரோதியா? என்று விவாதம் நடத்துங்கள். ஏனென்றால் 30 வருடம் சோனியா காந்தி தலைமையிலான தமிழ் விரோத காங்கிரஸ் திருவள்ளுவர் சிலையை படுதா போட்டுக் கட்டி வைத்திருந்தார்கள். பாஜகவின் முதல் சீப் மினிஸ்டர் எடியூரப்பா வந்த பின்னே வள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது'' என்றார்.