Published on 14/10/2019 | Edited on 14/10/2019
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவினர் அந்தந்த ஊர் வாக்காளர்களை கவருவதற்காக பெட்டிகடை வைத்திருப்பவர்களை கையில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு வீடு உள்ள ஓட்டுகளை எந்தெந்த கட்சிக்கு எத்தனை ஓட்டுகள் உள்ளன, அவைகளை பெற என்ன செய்ய வேண்டும் என முதலில் கணக்கெடுப்பு பணியை முடித்துள்ளனர்.
ஒவ்வொரு வீட்டு சுவற்றிலும் வாக்காளரின் அந்த வீட்டில் எத்தனை வாக்குகள் உள்ளன என்பதை வீட்டுக்காரர்கள் அனுமதி கூட இல்லாமல் அவர்கள் சுவற்றில் எழுதி அடையாளம் வைக்கப்படுகிறது. இதற்கு காரணம் இறுதியில் வீட்டுக்கு வீடு ஓட்டுக்காக பணப்பட்டுவாடாவை கச்சிதமாக முடிக்க முன்னேற்பாடுகளை அதிமுக தரப்பில் செயல்படுத்தி வருகிறார்கள்.
மந்திரிகள் ஓட்டு கேட்க போகும்போது மக்கள் எப்படி உள்ளனர் என்பதை அறிந்து அதற்கு தகுந்தவாறு வாக்குறுதிகளை வாரி வழங்குகிறார்கள். உதாரணமாக மந்திரி மாபா பாண்டியராஜன் மக்களிடம் கையெடுத்துக் கும்பிட்டு ஓட்டு கேட்டார். அப்போது உங்கள் குறைகளை சொல்லுங்கள் என்றார். அப்போது சிலர் நாங்கள் தப்பாட்டம் பறை இசை மேடை இசைக் கலையை கற்றுள்ளோம். எங்களுக்கு அதற்குத் தகுந்தவாறு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார்கள்.
அப்போது மந்திரி, அப்படியானால் இந்தாங்க என்னுடைய விசிட்டிங் கார்டு என கொடுத்து இதிலுள்ள இமெயில் முகவரிக்கு உங்கள் பயோடேட்டாவை அனுப்பி வையுங்கள். உங்களை எல்லாம் என் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் பண்பாட்டுத் துறையில் வேலை தருவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்.
அதை கேட்ட மக்கள் மெய்சிலிர்த்து போகின்றனர். இப்படி அரசு பணம் பணி என ஆளும் கட்சி ஆசைகாட்டி மக்களை அழைத்து வருகிறது. தேர்தல் பந்தயத்தில் முன்னணியில் உள்ளது அதிமுக.