Skip to main content

''திமுகவை அழிக்க நினைக்கிறார்கள்; என்ன பேரிழப்பு ஏற்பட்டாலும் விசிக தாங்கும்''-திருமா பேச்சு

Published on 15/12/2024 | Edited on 15/12/2024
They want to destroy DMK; No matter how much disaster there is, Visika will endure'-Thiruma's speech

அண்மையில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா திமுக குறித்து பேசியிருந்த கருத்துக்களுக்கு விசிகவின் தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறு மாதம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள். அந்த பொறுப்புகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன். சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே  விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

tvk

இந்நிலையில் கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசுகையில், ''என்னை தூதராக பயன்படுத்தி திமுகவை சிலர் அழிக்க நினைக்கிறார்கள். அவர்களின் உண்மையான குறி திமுக தான் நான் இல்லை. திமுக என்கிற அரசியல் இயக்கம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதற்காக சதி நிகழ்ந்து வருகிறது. விசிக எப்போதும் சனாதனத்திற்கு எதிராக தான் இருக்கும். எவ்வளவு பேரிழப்பு ஏற்பட்டாலும் அதை தாங்கிக் கொள்ளும் சக்தியாக விசிக இருக்கும்' என பரபரப்பாக பேசியுள்ளார்.

சார்ந்த செய்திகள்