anbumani ramadoss - K. Anbazhagan

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் உள்ள அவரை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி. நேரில் சென்று நலம் விசாரித்தார். அன்புமணியுடன் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் இரயில்வே அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, வழக்கறிஞரும் சமூகநீதி பேரவை தலைவருமான க. பாலு ஆகியோரும் சென்றனர்.