Skip to main content

தமிழர்கள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெருமிதம்!

Published on 06/03/2025 | Edited on 06/03/2025

 

Andhra CM Chandrababu Naidu is proud of Tamils

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதோடு மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ஒருவருடன் தொடர்புகொள்வதற்கு மட்டுமே மொழி தேவைப்படுகிறது. அறிவுசார்ந்த படிப்புகள் தாய்மொழி வழிக் கல்வி மூலம்தான் கிடைக்கும். தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் கற்றவர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர். கூகுள் தலைமை செயல் அதிகாரி கூட ஒரு தமிழர்தான். தமிழகத்தில் இருந்து பலரும் அமெரிக்கா செல்கின்றனர்.

தமிழர்கள் ஆங்கிலம் கற்று மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றனர். உயர் பொறுப்புகளிலும், முதல் மற்றும் 2ஆம் இடங்களிலும் தமிழர்களே அதிகம் உள்ளனர். தமிழகம் என்றாலே முன்பு இந்திய அளவில் சேவைத்துறையில் அதிகம் இருந்தார்கள். தற்போது உலகம் முழுக்கச் சென்றுள்ளார்கள். காரணம் அவர்களின் திறமை. எனவே அறிவு வேறு, மொழி வேறு. மக்களுடன் எளிதில் பழகுவதற்கு இந்தியை கற்றுக் கொள்வது நல்லதுதான். எனவே ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 5 முதல் 10 மொழிகளை கற்ற ஏற்படு செய்ய உள்ளேன்” எனப் பேசியுள்ளார். 

சார்ந்த செய்திகள்