இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிளவக்கல் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
அப்போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு பக்கம் அரசியல் சவால் ஒரு பக்கம் இயற்கை சவால் இரண்டையும் முதல்வர் சந்திக்கிறார். கடந்த ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்காது. அதிமுகவினர் அவர்களது இருப்பை காட்டுவதற்காகப் பேசுகிறார்களே ஒழிய உண்மை நிலவரத்தை அவர்கள் சொல்வதற்கு ரெடியாக இல்லை.
எல்லாரும் காண்ட்ராக்ட் விட்டுத்தான் வேலை செய்ய வேண்டும். எந்த கால்வாய் எங்கு கட்ட வேண்டும். எந்த இடத்தில் தண்ணீர் செல்லுகிறது. வெளியேறி செல்லும் தண்ணீருக்கு நாம் எவ்வாறு துவாரம் அமைக்கப்போகிறோம். இது எல்லாம் தொழில்நுட்ப வேலைகள். நாம் அவர்களிடம் பணத்தை கொடுத்து விட்டு வேறு வேலைகள் பார்ப்பது சரியல்ல.
முதல்வர் ஸ்டாலின் அனைத்திற்கும் கமிட்டி போட்டு ஒவ்வொன்றையும் தரமாக ஆராய்ந்ததால் தான் இவ்வளவு மழை வந்தும் தண்ணீர் எங்கும் தேங்காமல் கால்வாய்கள் மூலம் சென்றுள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலை சரிவில் இருக்கும் பிளவக்கல் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலாத் தளமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம்” எனக் கூறினார்.