போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் தமிழக போலீஸ் செயல்படுவார்கள் என்று அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் தற்போது வாட்ஸ்ஆப் வரைக்கும் போன் ஒட்டுக்கேட்பு உலகத்தையே அதிர வைத்துள்ளது. இது பற்றி விசாரித்த போது, பிரியங்காகவுக்கு வாட்ஸ்ஆப்பிலிருந்து எச்சரிக்கை மெசேஜ் வந்ததாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பிரியங்காவின் வாட்ஸ்ஆப் உரையாடல்களை பிகாசஸ் என்கிற உளவு பார்க்கும் இஸ்ரேல் சாஃப்ட்வேர் மூலம் பா.ஜ.க. அரசு உளவு பார்த்ததாக, வாட்ஸ் ஆப் நிறுவனமே பிரியங்காவுக்கும் தகவல் கொடுத்து அலெர்ட் பண்ணியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுபோல இந்தியாவைச் சேர்ந்த ஏறத்தாழ 40 பேரின் வாட்ஸ்ஆப் உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களான சசிதரூர், ஆனந்த் சர்மா ஆகியோர் அடங்கிய நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க இருப்பதாக கூறுகின்றனர். இந்தக் குழுவின் முதற்கட்ட விசாரணை, மத்திய உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் நடக்க இருப்பதாகவும் கூறுகின்றனர். அடுத்தவர் உரையாடலை ஒட்டுக் கேட்பது என்பது தனிமனித உரிமை மீறல் என்று தெரிந்தும் கூட, மத்திய அரசு தன் அரசியல் எதிரிகளை உளவு பார்க்க தன் அரசு அதிகாரத்தை பயன்படுத்தியிருப்பது குற்றம் தான் என்று அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.