
திமுக அரசின் அடக்குமுறை மற்றும் பொய் வழக்குகளை சட்டரீதியாக சந்திக்க வேண்டிய வல்லமை எங்களுக்கு உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திமுக அரசின் அடக்குமுறை, பொய் வழக்குகளை சட்டரீதியாக சந்திக்கக் கூடிய வல்லமை உள்ளது. அதிமுகவிற்கு எதிரான அடக்குமுறையை உடனே நிறுத்த வேண்டும். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் திமுகவை விமர்சித்த கருத்துக்களுக்கு இப்போதுவழக்கு போடப்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை கொள்வதை விடுத்து பொய் வழக்கு தொடுப்பதில் நாட்டம் செலுத்துகிறது திமுக'' என தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பெயரில் அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை தற்போதுள்ள திமுக தலைமையிலான அரசு மூட நினைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என நேற்று திமுகவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)