Skip to main content

சொந்த கட்சி பெயரையே தவறாக கூறிய நடிகை காயத்ரி ரகுராம்... மீண்டும் சர்ச்சையில் காயத்ரி ரகுராம்!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

சமீபத்தில் இந்துக்களுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறிய கருத்துக்கு சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்து இருந்தார். பின்பு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்துக்கு நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், எச்சு’ ராஜா ஒரு பைத்தியக்காரர். எந்த விவேகமுள்ள நபரும் அவர் பேசும் விதத்தில் பேச முடியாது. தயவுசெய்து பாஜகவில்  இருந்து யாராவது அவரை ஒரு புகலிடம் கொண்டு செல்ல முடியுமா ?? என்று பதிவிட்டுருந்தார். இதனையடுத்து  குஷ்புவின் இந்த கருத்துக்கு நடிகையும், பாஜகவின் ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,  'கூ' என குறிப்பிட்டு நீங்கள் மற்றவர்களின் பெயரைதான் அப்படி அழைக்க முடியும் என்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறியிருந்தார். 
 

bjp



இந்த நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து மதுரை வாடிப்பட்டி ஒன்றியத்தில் போட்டியிட பாஜகவுக்கு இரண்டு ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை காயத்ரி ரகுராம் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதா கட்சி என்று கூறுவதற்கு பதிலாக பாரதிய ஜனதா கழகம் என்று கூறிவிட்டார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட நடிகை காயத்ரி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசிவிட்டு திரும்பியுள்ளார். இதனால் அங்கு கூடியிருந்த மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. மேலும் சொந்த கட்சி பெயரையே தவறாக கூறியது பாஜக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. 


 

 

சார்ந்த செய்திகள்