Published on 08/07/2021 | Edited on 08/07/2021

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் நந்தா செந்தில் என்னும் செந்தில்வேல் இன்று (08.07.2021) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்வேல், இன்று கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனுக்கு தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் தன்னுடைய சொந்த அலுவல் காரணமாக தன்னால் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவியில் நீடிக்க முடியாது என்று குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.