Skip to main content
Breaking News
Breaking

தகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்! டென்ஷனான எடப்பாடி!

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

வரலாறு காணாத கனமழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுன்னு நீலகிரி மாவட்டமே தண்ணீரிலும் கண்ணீரிலும் மிதந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். கடந்த 100 வருடகாலத்தில் பெய்யாத அளவில், அங்க 3 ஆயிரம் மி.மீ. அளவுக்கு மழை பெய்திருக்கு. பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இன்னும் போதுமான உதவிகள் போய்ச் சேரலைனு சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதிகாரிகளும் அமைச்சர்களும் அங்கே விசிட் அடிச்சும் கூட அரசுத் தரப்பில் இருந்து போதுமான உதவிகள் இன்னும் முழுசா கிடைக்கலைன்னு வீடிழந்தும் உடைமைகள் இழந்தும் தவிக்கும் மக்கள் குமுறுறாங்க.

 

admk



நீலகிரிக்குப் போய் நேரில் பார்வையிட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணப் பணிகளுக்காகச் செலவிடப்படும்ன்னு அறிவிச்சிருக்கார். நீலகிரி எம்.பி.யான ஆ.ராசா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கிய 3 கோடி ரூபாயும் இதில் அடக்கம். இருந்தும், ஆ.ராசாவை நோக்கியும் மக்கள் கேள்வி கேட்குறாங்க. அந்தளவுக்கு பாதிப்பு இருக்கு. நீலகிரியே ஒட்டுமொத்தமா நிலைகுலைஞ்சு போயிருக்கும் நிலையிலும், அங்கே முதல்வர் எடப்பாடி உடனடியா போகலைங்கிற கோபம் மக்கள்கிட்ட இருக்கு. இதைத் தெரிஞ்சுகிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்., எடப்பாடிக்குத் தகவல் தராமலேயே நீலகிரிக்குப் போனார். நிவாரண உதவிகளை வழங்கிய அவர், கிட்டத்தட்ட ஒரு முதல்வர் ரேஞ்சில் செயல்பட்டிருக்காரு. 

மாவட்ட நிர்வாகத்தினரையும் வருவாய்த் துறையினரையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் போட்ட ஓ.பி. எஸ்., சேதத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும்ன்னு கேட்டிருக்கார். அதிகாரிகளோ குறைந்தபட்சம் 3,500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கு. இப்ப நிலச்சரிவையும் சேதமான சாலைகளையும் சரிபண்ணவே 200 கோடி ரூபாய் இருந்தாத்தான் சமாளிக்க முடியும்ன்னு சொல்லியிருக்காங்க. உடனே இதுகுறித்து முயற்சிப்பதாகச் சொல்லிவிட்டு ஓ.பி.எஸ். அங்கிருந்து கிளம்பியிருக்கார். இந்தத் தகவல் தெரிஞ்சதும் டென்ஷனான எடப்பாடி, இப்பவே ஓ.பி.எஸ். இப்படின்னா, நான் 28-ந் தேதி வெளிநாடு போன பிறகு, என்னவெல்லாம் செய்வாருன்னு தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் புலம்பி வருவதாக கூறுகின்றனர். 

சார்ந்த செய்திகள்