ஒரே நாளில் திமுகவுடனும், அதிமுகவுடன் தேமுதிக பேசியதாக செய்திகள் வெளியானது குறித்தும், தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தது தொடர்பாகவும் பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுகவின் செந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில்,
தேமுதிகவின் இருதி அத்தியாயம் இந்தத் தேர்தலோடு முடிவடைகிறது. பிரேமலதாவின் நிஜ முகம் தெரிந்தது. இயலாமையும் வெறுப்பும் கோபமும் வார்த்தையில் விழுந்தது. அண்ணன் துரைமுருகனின் ஒற்றை சொல் தேமுதிகவையே இல்லாதாக்கிவிட்டது.
தேமுதிகவினர் வந்து பேசியதை தலைவருக்கு தெரிவிக்க வேண்டிய அவசரமில்லை. அப்படியொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்ற சொல் தேமுதிகவின் பிம்பத்தையே தகர்த்துவிட்டது.
அவ்வளவு வொர்த் இல்லை என்பதை அவர்களுக்கே புரியவைத்த தருணம். பிரமேலதா, விஜயகாந்த் மனைவி என்பதை தாண்டி அவர் முக்கியத்துவம் இல்லை. தேமுதிக இத்தனை ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக பேராடியிருக்கிறதா? குறைந்தபட்சம் கண்டன ஆர்ப்பார்ட்டமாவது நடத்தியிருக்கிறதா?
தேர்தல் நேரத்தில் நல்ல விலைபேசலாம் என்ற வியாபார நோக்கோடு அமெரிக்காவில் மருத்துவசிகிச்சையில் இருந்த விஜயகாந்தை அழைத்து வந்து களைப்பு மிகுதியால் விமானநிலையத்திலேயே ஓய்வெடுக்கவேண்டிய நிலையில் இருப்பவரை முன்னிறுத்தி பேரம் பேசும் அயோக்கியத்தனத்திற்கு பெயர் அரசியலா?
அதிமுகவில் 37 எம்பிகள் இருந்தும் தமிழ்நாட்டிற்கு என்ன பயன் என்கிறார். உண்மை பிறகு ஏன் அவர்களிடத்தில் தொகுதிக்கு பேரம் பேசவேண்டும்? தகுதியற்றவர்களை கொண்ட கட்சி என்ற பிறகு திரும்ப திரும்ப ஏன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்? தேமுதிகவால் தமிழகத்திற்கு ஏதாவது நன்மை உண்டா? மக்கள் பிரச்சனைகளுக்காக போராடியதுண்டா? நீட் போன்ற திணிப்புகளை கண்டித்து தெருவில் இறங்கி கண்டனத்தை பதிவு செய்ததுண்டா?
மணப்பெண் என்றால் 10 பேர் பார்க்கதான் வருவார்கள் என்கிறார். சரி, ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தட்டு மாத்த முடியுமா என பார்ப்பது எவ்வளவு கேவலம்?
அண்ணன் துரைமுருகன் திமுக தலைமை பற்றி இவர்களோடு பேசினாராம். அவரை அறிந்தவர்களுக்கு அவரின் செயல்பாடுகள் தெரியும்.
தேமுதிக அழிவதற்கு யாரும் காரணமல்ல, பிரேமலதாவை தவிர.. கட்சியை கம்பெனி லெவலுக்கு நகர்த்தியது இவர்தான். உடல்நலியுற்று கணவர் இருக்கும்போது, அவரை வைத்து எவ்வளவு சம்பாதிக்க முடியுமென முயற்சிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
ஆனால் இவர்களின் பேராசையும் தன்னிலையறியாத செயலும் தேமுதிகவிற்கு இறுதி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது.
ஐம்பது வருட அரசியல் அனுபவம் தளபதியாரின் இன்றைய நக்கலில் தெரிந்தது. துரைமுருகன் வீட்டிர்க்கு போலீசார் பாதுகாப்பு போட்டிருக்கிரார்கள் என நிருபர்கள் கேட்டபோது, ''இனி யாரும் பேச்சுவார்த்தைக்கு வந்துவிடுவார்களோ என ஆட்சியாளர்கள் பாதுகாப்பு போட்டிருப்பார்கள்'' என்றார்.
மக்கள் செல்வாக்கு இருப்பதாக சொல்கிறார் பிரேமலதா, மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து போராடியிருக்கிராரா? விஜயகாந்த் உடல்நல குறைவிற்கு பிறகு மொத்தமாக அக்காவும் தம்பியும் ஆக்கரமித்தவுடன், கூட இருந்தவர்கள்கூட ஒவ்வொருவராக ஓடிவிட்டநிலையில் மக்கள் ஆதரவு இருப்பதென்பது நல்ல நகைச்சுவை.
கடைசியாக ஒரேயொரு கேள்வி. விஜயகாந்தை பேசவிடுங்கள். பத்திரிகையாளர்கள் முன்பு சில வார்த்தைகள் பேசட்டும். அப்போது தெரியும் உண்மைநிலை.
பிரேமலதாவும் சுதிஷும் விஜயகாந்தை வைத்து பிழைக்க பார்க்கிறார்கள். அது இந்த தேர்தலோடு முடிந்து போகும். தேமுதிகவின் இறுதி அத்தியாயம் எழுதப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.