Skip to main content
Breaking News
Breaking

எடப்பாடிக்கு கிடைத்த இரண்டு அதிர்ஷ்டம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் எடப்பாடி!

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சி ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என்று பிரிந்தது. பின்பு சசிகலா முதல்வர் பொறுப்பிலும், கட்சி பொறுப்பிலும் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட்டர். அதன் பின்பு எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைத்து சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கினார்கள். கட்சியையும், ஆட்சியையும் தனது வசமாக எடப்பாடி கொஞ்சம், கொஞ்சமாக மாற்றினார்.


  mgr



இதே போல் எடப்பாடிக்கு மேலும் இரண்டு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அதாவது அதிமுக கட்சி நிறுவன தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவினை முதல்வர் எடப்பாடி பழனிசாமியே தலைமை தாங்கி  நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் 2017-ம் ஆண்டு, இந்த நூற்றாண்டு விழாவை தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டத்திலும் தலைமை வகித்து விழாவை சிறப்பாக நடத்தினார். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் எதிர் கட்சி தலைவர் பெயரையும் சேர்த்து அச்சடித்தார். 

 

admk



அதே போல் 40 வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் தரக்கூடிய அத்திவரதர் நிகழ்வின் போதும் முதல்வராக இருந்த பெருமை எடப்பாடிக்கு கிடைத்துள்ளது. அதாவது, அத்திவரதர் வைபவ கல்வெட்டிலும் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இடம்பெற்றுள்ளதும் பெருமை வாய்ந்தவையாகவே கருதப்படுகிறது. அந்த கல்வெட்டு அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எந்த முதல்வர் பெயரும் அந்த கல்வெட்டில் இல்லை என்பது குறிப்படத்தக்கது.    

சார்ந்த செய்திகள்