






Published on 29/03/2021 | Edited on 29/03/2021
சட்டமன்றத் தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் அவர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.நேற்று (28.03.2021) பிற்பகல் 3 மணி அளவில், சைதாப்பேட்டை 139வது வட்டம் கங்கை அம்மன் கோயில் அருகில், கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.