Skip to main content

கரோனா ஊரடங்கிலும் குடிநீருக்கு பண வசூலா? திமுக கண்டன ஆர்ப்பாட்டம்...

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

dmk

 

கரோனா காலத்தில் குடிநீருக்கு பணவசூல் செய்வதை தமிழக அரசு உடனே நிறுத்தக்கோரி செந்துறை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

கடந்த ஜூலை 7 அந்து கரோனா தொற்றால் அரசு விடுத்த ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். இந்த நேரத்தில் செந்துறை ஒன்றியத்தில் கிராமப்புறங்களில் குடிநீர் இணைப்புக்கு உள்ளாட்சி துறை மூலம் ரூ. 1000 கட்டாய வசூல் செய்யப்படுகிறது. தமிழக அரசின் இந்த கொடுஞ்செயலைக் கண்டித்தும், கட்டண வசூலை உடனே நிறுத்த கோரியும் இன்று காலை 9 மணிக்கு செந்துறை வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்கள் முன்பாக கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

dmk

ஆலத்தியூரில் ஒன்றிய செயலாளர் மு. ஞானமூர்த்தி, அசாவீரன் குடிக்காட்டில்கழக கொள்கைபரப்பு துணை செயலாளர் ச.அ. பெருநற்கிள்ளி, பெரியாகுறிச்சியில் மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், பொன்பரப்பியில் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பி. ஆர். பாண்டியன், குழுமூரில் ஒன்றிய பொருளாளர் கே. ஆர். பெரியசாமி, சிறுகளத்தூரில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் (பரிந்துறை) துரை. தேன்துளி, தளவாயில் ஒன்றிய வி. தொ. அணி. அமைப்பாளர்(பரிந்துறை) புலேந்திரன், அயன்தத்தனூரில் ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர்(பரிந்துறை) க. நல்லுசாமி, மணக்குடையானில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆ. தமிழ்மாறன், மணபத்தூரில் ஊராட்சி கழக செயலாளர் ஜெயராமன், வஞ்சினபுரத்தில் ஊராட்சி கழக செயலாளர் அன்பழகன், மருவத்தூரில் ஊராட்சி கழக செயலாளர் அருள்மணி, துளாரில் ஊராட்சி கழக செயலாளர் ஜெய்குமார், ஆதனக்குறிச்சியில் ஊராட்சி கழக செயலாளர் இராசேந்திரன், சன்னாசிநல்லூரில் ஒன்றிய இளைஞர் அணி துணைஅமைப்பாளர் இர. பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் கலையரசன், ஒன்றிய அவைத்தலைவர் மா. சிவப்பிரகாசம், ஒன்றிய துணை செயலாளர்கள் வி. எழில்மாறன், விபி. நடேசன், மு. சபாபதி, ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மு. சித்ரா, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் இராசவேல், ஒன்றிய மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பி. வித்தியா, ஒன்றிய ஆதி திராவிடர் நல அணி அமைப்பாளர் ம. ரெங்கநாதன், ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் வீரா. ராசேந்திரன், ஒன்றிய கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் இராசு, ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் இராசா, ஒன்றிய நெசவாளர் அணி ச. வேல்முருகன், ஒன்றிய சிருபான்மையோர் அணி அமைப்பாளர் அக்பர் அலி, ஒன்றிய பொறியளர் அணி அமைப்பாளர் ம. கணேசன் மற்றும் கழக முன்னணியினர் கலந்துகொண்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. “தமிழக அரசே, எடப்பாடி அரசே! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! குடிநீருக்கு பணம் கேட்பதை! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! கரோனா தொற்று காலத்தில்! குடிநீருக்கு பணம் கேட்பதை! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! ஊரடங்கு காலத்தில்! வாழ்வாதாரம் இல்லாமல்! வதைபடும் மக்களிடம்! குடிநீருக்கு பணம் கேட்கும்! கொடுங்கோலன் எடப்பாடியே! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! குடிநீர்கட்டணத்தை உடனே நிறுத்து! இணைப்புக்கு 1000 ரூபாய்! எங்கேபோவோம்! எங்கேபோவோம்! ஊரடங்கு பேரிடர் நிதியாய்! அரசு கொடுத்ததோ 1000ம் ரூபாய்! அதையும் பிடுங்கும் எடப்பாடியே! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! ஊராடங்கு காலத்தில்! உணவுக்கு தவிக்கும் மக்களிடம்! குடிநீருக்கு பணம் கேட்கும்! உள்ளாட்சி துறையை கண்டிக்கிறோம்! உடனே நிறுத்து ! உடனே நிறுத்து! குடிநீருக்கு பணம் கேட்பதை! உடனே நிறுத்து! உடனே நிறுத்து!” என முழக்கமிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்