Skip to main content

நேரடியாக போட்டியிட விரும்பாத திமுக - அதிமுக!

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

 

நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் திமுகவும், அதிமுகவும் கூட்டணியை இறுதிப்படுத்தி ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் என்ற ஒப்பந்தத்தையும் முடித்துவிட்டது. 
 

மேலும் தங்கள் கட்சி தொண்டர்களிடமிருந்து தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுவை பெற்று நேர்காணலையும் நடத்தி முடித்துவிட்டது. 
 

தொகுதி பங்கீட்டை முடித்த திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமை, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என முடிவு செய்து அறிவிக்கவில்லை. 


 

dmk - admk office


முதலில் திமுக அறிவிக்கட்டும் என அதிமுகவும், முதலில் அதிமுக அறிவிக்கட்டும் என திமுகவும் காத்திருக்கிறது. 
 

இந்தநிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதில் திமுகவும், அதிமுகவும் புதுக்கணக்கு போட்டுள்ளது. திமுகவும் அதிமுகவும் நேரடியாக போட்டியிட விரும்பவில்லையாம். 


கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதியில் தங்களது கட்சியினர் சுறுசுறுப்பாக வேலை செய்ய மாட்டார்கள் என்பதால், எதிரணியில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. அப்படி போட்டியிட்டால் பிரதான கட்சியான தங்களது சின்னத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கும். 
 

மேலும், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலைப்போன்று கூட்டணி கட்சிகளின் வலிமையையும் குறைக்க முடியும் என்று இருகட்சிகளும் திட்டமிட்டுள்ளதாம். 
 

கலைஞர், ஜெயலலிதா இருந்தபோது இரு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசிக்கொள்வது மிகவும் குறைவு. தற்போதைய நிலையில் இருகட்சியைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது பேசிக்கொள்கிறார்கள். கூட்டணி கட்சிகளின் வலிமையை குறைக்க வேண்டும் என்று அவ்வப்போது பேசிக்கொள்கிறார்களாம்.

 

 


 

சார்ந்த செய்திகள்