Published on 03/08/2019 | Edited on 03/08/2019
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா மருமகன் சித்தார்த்தாவின் உடல் இரண்டு நாள் தேடுதலுக்கு பின்பு நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த 29ஆம் தேதி மங்களூரு அருகே காரில் சென்றுள்ளார் சித்தார்த்தா. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனஉளைச்சலில் காரை விட்டு இறங்கிய சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களாக அவரது உடல் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. அப்போது அவரது அணிந்திருந்த சட்டை தற்போது வரை கண்டுபிடிக்காமல் இருப்பது மர்மமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சித்தார்த்தா எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் எனது சொத்தை வருமானவரித்துறையினர் முடக்கியதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் தான் வருமானவரி செலுத்தவில்லை என்று வருமானவரித்துறையினர் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தபோதும் எனது சொத்தை முடக்கியதாக தெரிவித்து இருந்தார். ஆனால் வருமான வரித்துறையினர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது சரியான தகவல் இல்லை என கூறியுள்ளனர். இதனால், அவரின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லபடுகிறது.