Skip to main content

இணைக்கப்படும் அரசு வங்கிகள் அடுத்த நிதியாண்டு முதல் செயல்பாட்டிற்கு வரும்

Published on 24/12/2018 | Edited on 24/12/2018

விஜயா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் தேனா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் இணைப்பதற்கான நடவடிக்கைகள் இந்த மாதம் இறுதிக்குள் செயல்படுத்தப்படுமென கூறப்பட்டுள்ளது. 

 

bb

 

 

இணைப்புக்கான செயல்பாடுகள், ஜனவரி மாதம் 8-ம் தேதி வரையில் நடக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சமர்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைக்கப்பட்ட வங்கிகள் அடுத்த நிதியாண்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மூன்று வங்கிகள் இணைப்புக்கு கடந்த செப்டம்பர் மாதமே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்