மண் சரிவில் சிக்கி நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் உள்ளது கஸ்பாமோகன்புரா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பல பேர் மண் எடுக்கும் பணிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென குழியில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பெண்கள் பலர் சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பெண்களும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
'திரியோதன்' என்ற பெயரில் கொண்டாடப்படும் விழாவையொட்டி கிராமத்தில் உள்ளவர்கள் வீடு மற்றும் அடுப்புகளுக்கு வர்ணம் பூசுவதற்காக மண் எடுப்பது என்பது வழக்கம். அந்த வகையில் திருவிழாவிற்காக மண் எடுக்கச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அறிந்து உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததோடு நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சம்பவத்தின் மேலும் ஐந்து பெண்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.