Skip to main content

நாக்பூரில் ஒரு வார கால ஊரடங்கு; கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

kl;

 

கரோனா தொற்று, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் கரோனா பரவல் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இந்தியாவிலேயே அங்குதான் தினமும் அதிகம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து அங்கு ஏற்கனவே சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாக்பூரில் கடந்த சில நாட்களாக 1,000க்கும் அதிகமான கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

 

இதனால், நாக்பூர் காவல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 முதல் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 21ஆம் தேதி வரை அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவை ஏற்பட்டால் அது நீட்டிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவையில்லாமல் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம என்று காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்