உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக மாநில அமைச்சரவை கூட்டத்திற்கு மாநில அமைச்சர்கள் செல்போன் எடுத்து வர தடை விதித்துள்ளார். அதே போல் அரசு நிர்வாகத்திலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் உத்தரப்பிரதேச மாநில அரசு ஊழியர்கள் காலை 09.00 மணிக்கு அலுவலகம் வர வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் அவர்களின் மாத ஊதியம் 'கட்' செய்யப்படும் என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதே போல் மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் காலை 09.00 மணியிலிருந்து 11.00 மணி வரையில் மக்களை சந்திக்க வேண்டும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் உத்தரவுக்கு அம்மாநில அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.