Published on 16/11/2018 | Edited on 16/11/2018
![modi](http://image.nakkheeran.in/cdn/farfuture/o5Aj7s9Th2v-R9peTB-1At1SdTLGFOqi29IJoTuq4N0/1542370542/sites/default/files/inline-images/modi.jpeg)
புனே கோரேகான் பகுதியில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக தெலுங்கு புரட்சிக் கவிஞர் வராவர ராவ், சமூக ஆர்வலர் சுபா பரத்வாஜ் உள்பட பலர் மீது போலிஸார் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர். இதில் முதன்மையாக 10 பேர் மீது குற்றப்பத்திரிகை நேற்று புனே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், ஆயுதங்களுடன் அரசுக்கு எதிராக யுத்தம் தொடுக்க முயன்றதாகவும்அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்டுகளின் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் கிடைத்த ஆவணங்களின் மூலம் ஆதாராங்கள் திரட்டி இந்த குற்றச்சாட்டை வைப்பதாக போலிஸ் தெரிவித்துள்ளனர். இதுபோன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதனால் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.