Published on 02/11/2019 | Edited on 02/11/2019
2016 ஆகஸ்ட் மாதத்திலிருந்து கடந்த அக்டோபர் மாதத்திற்கு இடையில் இந்தியாவின் வேலையின்மை 8.5 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பு என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஹரியானா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் மிக அதிகமாக 20 சதவீதம் அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமே வேலையின்மை அளவு 1.1 ஆக இந்தியாவில் மிக குறைந்த அளவாக இருக்கிறது. ராஜஸ்தானில் 2018-2019ல் வேலையின்மை இரண்டு மடங்காக அதிகரித்து 14 சதவீதமாக இருக்கிறது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் வேலையின்மை சராசரியாக 10 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது.
இந்திய அளவில் நகர்ப்புற வேலையின்மை சராசரியாக 8.9 சதவீதமாகவும், கிராமப்புற வேலையின்மை 8.3 சதவீதமாகவும் இருக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.