
புதுச்சேரி அடுத்த வானரபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன்(48). புதுச்சேரியில் பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வெடிகுண்டு, பாலியல் தொழில் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் புதுச்சேரி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
புதுச்சேரியின் சரித்திர குற்றப்பதிவேட்டில் உள்ள ஐயப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் தொழில் வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளார். பாண்டிச்சேரி காவல்துறையினரின் கெடுபிடியால், கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாட்டில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் ஏரி கோடி பகுதியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த திருவண்ணாமலை போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் டி.எஸ்.பி அறிவழகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து வேட்ட வலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.