சமீப காலமாக, பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய விமான நிறுவனங்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. இதுவரை மட்டுமே, 170 விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. இது குறித்து நடத்தி விசாரணையில் அனைத்தும் புரளி என்று கண்டயறிப்பட்டு வருகிறது. இருப்பினும் அட்டவணை மாற்றம், விமான ரத்து என விமான சேவைகள் பலவகைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், விமான பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே, விமான நிறுவனங்களுக்கு மிரட்டல்கள் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ‘விமானங்களுக்கு மிரட்டல்களை விடுக்கும் நபர்கள் அடையாளம் காணப்பட்ட பிறகு, அவர்கள் இனி விமானத்தில் செல்ல தடை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்த மிரட்டல்களின் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று மட்டும் இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா நிறுவனங்களைச் சேந்த 50 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கல் வந்துள்ளன. இதனால், இண்டிகோ நிறுவனத்தின் 3 சர்வதேச விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பெங்களூரில் இருந்து ஜெட்டா சென்ற விமானம் தோகாவிலும், கோழிக்கோட்டில் இருந்து ஜெட்டா சென்ற விமானம் ரியாத்திலும், டெல்லியில் இருந்து ஜெட்டா சென்ற விமானம் மெதினாவிலும் தரையிறக்கப்பட்டன. இதனால், பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர். சமூக ஊடகங்கள் வழியாக இந்த மிரட்டல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.