மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள 91 தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவின் பெங்களூர் தெற்கு தொகுதிக்கு நீண்ட இழுபறிக்கு பின்னர் பாஜக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. 28 வயதான பாஜக இளைஞர் அணியின் செயலாளராக உள்ள தேஜஸ்வி சூர்யா பெங்களூர் தெற்கு மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 28 வயதான இவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய வரலாற்றிலேயே குறைந்த வயதில் எம்.பி ஆனவர் என்ற பெருமையை தேஜஸ்வி பெறுவார். இவர் போட்டியிடும் தொகுதியில் இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஹரிபிரசாத் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.