Published on 25/06/2021 | Edited on 25/06/2021
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு, தளர்வுகள் என ஒவ்வொரு மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸின் தாக்கமாக கருப்பு பூஞ்சை போல மாற்று சில நோய்களும் பரவி வரும் நிலையில் தற்போது உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு இந்தியாவில் உறுதி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் 45 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தம் 48 பேருக்கு இதுவரை உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 7 பேருக்கும் உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.