இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் கரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது.
கரோனாவால் சாதாரண மக்கள் மட்டுமின்றி, மாநில முதல்வர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று (29.04.2021) ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அசோக் கெலாட், தான் எந்த அறிகுறியுமில்லாமல் நலமாக இருப்பதாகவும். வீட்டிலேயே தனிமையில் இருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அசோக் கெலாட்டின் மனைவிக்கு நேற்று கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அசோக் கெலாட், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அசோக் கெலாட்டின் மனைவிக்கும் வீட்டிலேயே சிகிச்சையளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.