Published on 21/10/2021 | Edited on 21/10/2021

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2021 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.