புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் நேற்று (02.12.2019) கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மிக கனமான பொருள் மீனவர்கள் வலையில் சிக்கியது. மற்ற மீனவர்களுக்கும் தெரிந்து இரும்பிலான உருளை போன்ற அந்த பொருளை மீனவர்கள் அச்சத்துடன் கரைக்கு கொண்டு வந்தனர்.
இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த ஒதியன்சாலை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் செயற்கை கோளை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் மோட்டார் அது என்பது தெரியவந்தது. 2019- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22- ஆம் தேதி என எரிபொருள் உந்து சக்தி டேங்கரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் கிடைத்ததில் பி.எஸ்.எல்.வி ஆறு திட்ட உந்து சக்தி ஸ்ட்ராப்- ஆன் மோட்டார்களைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொன்றும் 9 டன் உந்துசக்தியைக் கொண்டு செல்லும் நிலையில் இதன் புதிய சிறப்பாக, PSMO - XL (solid propellant strap-on motors) 13.5 மீ நீளத்துடன், 12.4 டன் சுமக்கும் திறன் கொண்டு உருவாக்கப்பட்டது. பிஎஸ்ஓஎம்-எக்ஸ்எல் 1600 கிலோ வரை எடை கொண்டது என்றும் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளிலும், ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்துவது என தெரியவந்துள்ளது. இதன் தகவல்கள் இஸ்ரோ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.