நாடு முழுவதும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது என பல பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கூறி வந்த நிலையில் மத்திய அரசு சார்பில் இது குறித்து பெரிய விளக்கங்கள் எதுவும் கொடுக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை குழுவில் உள்ள ஷமிகா ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "நமது பொருளாதாரத்தில் தற்போது தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அனைத்து துறைகளுக்கும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து தேசிய அளவில் வளர்ச்சி திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். அத்துடன் பொருளாதாரத்தில் மிகப் பெரிய சீர்த்திருத்தம் செய்யவேண்டும். பொருளாதார வளர்ச்சியை நிதி அமைச்சகத்திடம் மட்டும் விடுவது நிறுவனத்தின் வளர்ச்சியை கணக்கு துறையின் கையில் விடுவது போல இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.