!['' People of that state are homosexuals '' - Vivek Agnihotri issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/XW8ZSu60ThcVksqkYR-WK2QincZh98k2cVRiXVRzmHY/1648269271/sites/default/files/inline-images/z6_29.jpg)
அண்மையில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், அந்த திரைப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் பேச்சு அவரை பெரும் சர்ச்சையில் சிக்கவைத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விவேக் அக்னிஹோத்ரி, 'போபால் மக்கள் என்றால் ஓரினச்சேர்க்கையை விரும்புபவர்கள்' என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் கிளம்பியுள்ளன. குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. விவேக் அக்னிஹோத்ரி அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்தியப் பிரதேச காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நீங்கள் சார்ந்திருக்கும் இடம்தான் உங்களை இப்படி பேச வைக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய்சிங் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியை கடுமையாகச் சாடியுள்ளார்.