Published on 27/06/2019 | Edited on 27/06/2019
இரண்டாவது முறையாக பாஜக அரசு மத்தியில் ஆட்சியை பிடித்த பிறகு அதன் முதல் பட்ஜெட் தயாராகி வருகிறது.
கடந்த வாரம் பட்ஜெட் தொடர்பான விவரங்கள் அச்சடிக்கும் பணிகள் துவங்கப்பட்ட நிலையில் கூடிய விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பட்ஜெட் குறித்த தேதி அறிவிக்கப்படாத நிலையில், இதில் இந்திய பொருளாதாரம், பாதுகாப்பு, விவசாயம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் பணிகள் ஒருபுறம் நடக்கும் நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசியுள்ளார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.