Skip to main content

சந்திரபாபு பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் மோடி

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Modi will participate in Chandrababu's swearing-in ceremony

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இன்று மாலை 5.30 மணிக்கு நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைச்சரவை முதல் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தேதி குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாகவும், அதேபோல் இந்த வருடத்திற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறித்த பரிந்துரை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட இருக்கிறது.

இந்நிலையில் என்.டி.ஏ கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் ஆந்திர முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சி வரும் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறும் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சார்ந்த செய்திகள்