Skip to main content

எம்.எல்.ஏக்கள் பதிவியேற்பில் ஆச்சரியம்... அஜித் பவாருடன் ஒன்றாக வந்த சுப்ரியா சுலே!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியான நிலையில் இன்று (நவம்பர் 27) எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர். வெற்றி பெற்ற கூட்டணியான பாஜக, சிவசேனா கட்சிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அந்த மாநிலத்தில் யாரும் ஆட்சியமைக்க முடியாமல் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழிவகுத்தது. இரண்டாவது, மூன்றாவது பெரிய கட்சிகளை ஆட்சியமைக்க கோரிய ஆளுநர் அவர்களுக்கான போதிய நேரத்தை வழங்காதது விமர்சனங்களைச் சந்தித்தது.

சிவசேனா கட்சி எதிர்பாராதவிதமாக, எதிரெதிர் புள்ளிகளிலிருந்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஆட்சியமைக்க தயாராகி ஆச்சர்யமளித்த வேளையில், பாஜக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக இருந்த அஜித் பவாரின் ஆதரவுடன் ஆட்சியமைத்தார். இந்நிலையில் சரத்பவார் பாஜகவுக்கு ஆதரவு இல்லை என திட்டவட்டமாக மறுத்ததுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராவார் என அறிவித்தார். இந்நிலையில் தேவேந்திர ஃபட்னவிஸும் அஜித் பவாரும் பதவி விலகினர். இதையடுத்து இதையடுத்து நேற்றிரவு 10 மணிக்கு, ஆளுநரைச் சந்தித்த உத்தவ் தாக்கரே ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் நாளை மாலை 6.40 மணிக்கு உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்கிறார்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அஜித் பவாரும், குற்றம் சாட்டிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலேவும் இணைந்து சட்டமன்றத்துக்கு வருகை தந்தனர். பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிஸும் சுப்ரியா சுலேவும் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்