School girl in auto molested; Driver arrested in POCSO

ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவியிடம் ஓட்டுநர் அத்துமீறி நடந்து கொண்டது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் சாலையோரம் உள்ள காட்டுப்பகுதியில் நின்றுகொண்டிருக்கும் ஆட்டோவில், ஓட்டுநர் ஆட்டோவில் தனியாக பயணித்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. அந்த காட்சிகள் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்தது தெரியவந்தது.

Advertisment

சம்பவம் நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்தபொழுது ஆட்டோவில் ஒட்டப்பட்டிருந்த MERCEDES லோகோவை ஆதாரமாகக் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணை அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.