Published on 23/12/2019 | Edited on 24/12/2019
நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில் குடியுரிமை சட்டம் பற்றி விளக்குவதற்கான கூட்டம் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. இதில் பேசிய அம்மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், " மதத்துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு மோடி கடவுளாக வந்துள்ளார். அவர் கடவுளுக்கும் எந்த வித்தில் குறைவானவர் அல்ல" என்று அவர் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.