Published on 17/10/2018 | Edited on 17/10/2018
மீ டூ விவகாரத்தை தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்த மத்திய இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் பிரதமரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார், அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது,
பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கும் நன்றி, என்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை, நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றத்தின் வாயிலாக நிரூபிப்பேன்.
எம்.ஜே. அக்பர் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ப்ரியா ரமணி புகாராளித்தார். அதை மறுத்துவந்த அக்பர் தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ‘மீ டூ’ புகாரில் ராஜினாமா செய்த முதல் அமைச்சர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.