கேரளாவைச் சேர்ந்த கும்மனம் ராஜசேகரன், கடந்த ஆண்டு மே மாதம் மிசோரம் மாநிலத்தின் கவர்னராக பதவியேற்றார். சுமார் 10 மாத காலமாக அங்கு கவர்னர் பதவியில் இருந்த அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்ததிடம் அவர் அளித்த நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மேலும் மிசோரம் மாநிலத்திற்கு பொறுப்பு ஆளுநராக, அசாம் மாநில ஆளுநர் பேராசிரியர் ஜக்தீஷ் முகிக்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சில தினங்களாக கும்மனம் ராஜசேகரன் பாஜக சார்பில் கேரளாவில் போட்டியிடுவார் என பேசப்பட்டுவந்த நிலையில் தற்போது அவரது ராஜினாமா அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இருக்கிறது. மேலும் கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் அவர் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்பி சசிதரூர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.