தமிழக அரசு மீண்டும் சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள நிலையில், ஆளுநர் ரவி இன்று காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
முன்பு அனுப்பப்பட்டிருந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யும் மசோதாவை ஆளுநர் நிராகரித்தது மற்றும் நிராகரித்ததற்கான ஆவணம் வெளியாகியது. கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி இடப்பட்ட கடிதத்தை தமிழக அரசுக்கு ஆளுநர் அனுப்பி இருக்கிறார். அதில், 'பந்தயம், சூதாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் மீது மட்டுமே மாநில அரசுகளால் சட்டம் இயற்ற முடியும். திறன்களை வளர்க்கக்கூடிய சில விஷயங்கள் இருக்கிறது. எனவே ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய முடியாது. இதுபோன்ற சட்டத்தை இயற்றும் அதிகாரம் மாநில சட்டப் பேரவைக்கு இல்லை. திறன் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகள் மத்திய அரசின் பட்டியலில் இருப்பதாக சட்ட ஆணையம் தெரிவித்திருக்கிறது. பெட்டிங் உள்ளிட்ட அதிர்ஷ்டத்தால் வெல்லக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே மாநில பட்டியலில் 34வது பிரிவில் இருகிறது.’ என ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் டெல்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் சந்திப்பு மேற்கொண்டார்.