
அண்ணனுடன் ஏற்பட்ட தகராறில் தம்பியை, இரண்டு சிறுவர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், நவ்சாரி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். இவர், அந்த பகுதியில் உள்ள இரண்டு சிறுவர்களுடன் பழகி வந்துள்ளார். அந்த சிறுவர்களுடன், இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்வது போன்ற ராகுல் ஈடுபட்டு வந்துள்ளார். இது ராகுலின் மூத்த சகோதரர் பிடிக்கவில்லை. இதனால், இரண்டு சிறுவர்களையும் திட்டி, தடியால் அடித்து ராகுலிடம் இருந்து விலகி இருக்குமாறு கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சிறுவர்கள் இரண்டு மாதங்களாக ராகுலிடம் இருந்து விலகி இருந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று அந்த சிறுவர்கள், ராகுலை சந்தித்துப் பேசியுள்ளனர். மூன்று பேரும் ஒன்றாக ஒரு இடத்தில் சாப்பிட்டுள்ளனர். அப்போது ராகுலின் அண்ணன், சிறுவர்களை அடித்தது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள், ராகுலைத் தாக்கி அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். அதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று தங்களது வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும், போலீசார் அவர்களை கண்டிபிடித்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, இரண்டு சிறுவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.