Skip to main content

மின்னலைப் பார்த்ததால் நின்ற திருமணம்!!!

Published on 30/06/2018 | Edited on 30/06/2018
marriage

 

 



இந்தியாவின் வடமாநிலங்களான பீஹார் மற்றும் உத்திரப்பிரேதசம் மாநிலங்களில் திருமண விஷேங்களின்போது எதாவது அசம்பாவிதம் நடந்து அவ்வப்போது திருமணமே நின்றுவிடும். நாம் இதுபோன்ற செய்திகளை அடிக்கடி கேள்விபட்டிருப்போம்.

 

இந்த ஆண்டு எப்ரல் மாதத்தில் உபியில் ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரசகுல்லா பரிமாறுவதில் பிரச்சனை ஏற்பட்டு திருமணம் நின்றது. கடந்த வாரம் பீஹாரில் திருமணத்தில் சாப்பாடு பரிமாறும்போது தட்டு பற்றாக்குறையால் இரு வீட்டாருக்கும் சண்டை எற்பட்டதில் ஒருவர் பலியே ஆகிவிட்டார். இதுபோன்று கடந்த ஆண்டில் இறைச்சி துண்டு வைக்காதது, ஐஸ்க்ரீம் வைக்காதது போன்ற காரணங்களால் நின்ற பல திருமணங்கள் இருக்கின்றன.

 

 

 

தற்போது பீஹார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் மணமேடையில் மணமகன் மின்னலை பார்த்து பயந்து விநோதமாக நடந்து கொண்டதால் மணப்பெண் அவரை வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு இரு வீட்டாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, அது கலவரமானது. மணமகள் வீட்டாரை அடித்ததற்காக மணமகன் வீட்டார் மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.       

 

 

 

 

சார்ந்த செய்திகள்