Skip to main content

பா.ஜ.க எம்.எல்.ஏ மீது முட்டை வீச்சு; பரபரக்கும் சம்பவம்

Published on 26/12/2024 | Edited on 26/12/2024
Egg pelting incident on BJP MLA in karnataka

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாய்பாய்யின் 100 வது பிறந்தநாள் நேற்று (25-12-24) கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் அவரது நினைவு இடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவருக்கு முட்டை வீச்சு சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடகா மாநிலம், லட்சுமிதேவி நகர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான முனிரத்னா கலந்துகொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட பிறகு தனது கார் இருக்கும் இடத்திற்கு நடந்து கொண்டிருக்கும் போது, எம்.எல்.ஏ முனிரத்னா மீது முட்டை வீச்சு சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், எம்.எல்.ஏ முனிரத்னா தனது தொண்டர்கள் மற்றும் சில போலீசாருடன் நடந்து கொண்டிருக்கும் போது, எதிர் திசையில் இருந்து அவரது தலையில் முட்டை வீசப்பட்டது. இந்த சம்பவம் நந்தினி லேஅவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே,  காங்கிரஸ் கட்சியினர் தான் எம்.எல்.ஏ மீது முட்டைகளை வீசியதாக பா.ஜ.க குற்றம் சாட்டி வருகிறது.

சார்ந்த செய்திகள்