Published on 02/11/2020 | Edited on 02/11/2020
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாக பரவிக்கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் என கரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கூட தமிழக அமைச்சர் துரைக்கண்ணு கரோனா காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஒடிசா ஆளுநர் கணேசி லால் மற்றும் அவரது மனைவிக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சில வாரங்களுக்கு முன்பு தமிழக ஆளுநருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.