Published on 19/08/2019 | Edited on 19/08/2019
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது.
அதன் பின் அவரை மீண்டும் எம்.பி ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவர் எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருந்த பாஜக எம்.பி மதன்லால் சைனி கடந்த ஜூன் மாதம் காலமானார். எனவே தற்போது அவருக்கு பதிலாக மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில், எம்.பி யாக போட்டியின்றி மன்மோகன்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.